தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண் தானம் செய்ய முன்வந்த இளைஞர்கள்! - கண் தானம்

ஈரோடு: பெரியார் நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது மரணத்திற்குப் பிறகு தங்களது கண்களை எடுத்துக் கொள்ளலாம் என்கிற உறுதியுடன் தாமாக முன்வந்துள்ளனர்.

admk
admk

By

Published : Sep 12, 2020, 2:46 PM IST

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்களைத் தானமாக வழங்கியதுடன், தனது மரணத்திற்குப் பிறகு தனது கண்களை எடுத்துக்கொள்ளலாம் என்கிற உறுதிமொழிப் படிவத்திலும் கையெழுத்திட்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கண் தானம் வழங்குவோர் தாமாக முன்வந்து தங்களது கண்களைத் தானமாக வழங்கிவருகின்றனர்.

ஈரோடு பெரியார் நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது மரணத்திற்குப் பிறகு தங்களது கண்களை எடுத்துக்கொள்ளலாம் என்கிற உறுதியுடன் தாமாக முன்வந்துள்ளனர்.

இதற்கு வரவேற்பைத் தெரிவித்துள்ள அதிமுக ஈரோடு மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.வி.ராமலிங்கம் கண் தான படிவங்களையும், உறுதிமொழிப் படிவங்களையும் வழங்கினார். கண் தான படிவங்களைப் பெற்றுக்கொண்ட இளைஞர்கள் இறந்ததற்குப் பிறகு பயனின்றி மண்ணுக்கோ, நெருப்புக்கோ போகும் கண்களை பயனுள்ளதாக பிறருக்குப் பயன்படும் வகையில் கொடுத்து பார்வையில்லாதவர்க்கு பார்வைக்கு கொடுத்து உயிர் வாழ்வோம் என்று தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details