தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பருவமழை முன்னெச்சரிக்கை - கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

ஈரோடு: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வுமேற்கொண்டார்.

ஆய்வு
ஆய்வு

By

Published : Oct 5, 2020, 7:00 PM IST

தமிழ்நாடு முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டுக்கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான காகர்லா உஷா, கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காகவும், பேரிடர் கால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் ஈரோடு மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காகர்லா உஷா, மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உள்ளிட்ட அலுவலர்களுடன் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கருங்கல்பாளையம் காவிரிக் கரையோரத்திற்கு சென்ற காகர்லா உஷா மழை தீவிரமடைந்தால் கரையை நிரம்பும் மழை நீரினால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கை நிலை, அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு இடங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மழைக்காலம் தொடங்கியதும் காவிரிக்கரையோரங்களில் குளிக்கவும், துணிகளைத் துவைத்திடவும், காரியங்களை செய்திடவும் தடைவிதித்திட வேண்டும் என்றும் அதற்காக அலுவலர்களை விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கைகளை தெரிவித்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் நீர்நிலைப் பகுதிகளில் கரோனா வைரஸ் நோய் பாதிப்பும் நோய்ப்பரவலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் மக்கள் நடமாட்டத்தை நீர்நிலைப் பகுதிகளில் குறைத்திட வேண்டும் என்றும், மக்கள் நடமாட்டத்தைக் கண்காணித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details