தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Monkey Stealing Eggs: முட்டைகளைத் திருடும் குரங்குகளால் கடைக்காரர்கள் வேதனை - முட்டைகளை திருடும் குரங்குகளால் கடைக்காரர்கள் வேதனை

Monkey Stealing Eggs: சத்தியமங்கலம் பகுதியில் உள்ள உணவகங்களில் முட்டைகளைத் திருடிச் செல்லும் குரங்குகளைப் பிடிக்க வேண்டும் என கடைக்காரர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

முட்டைகளை திருடும் குரங்கு
முட்டைகளை திருடும் குரங்கு

By

Published : Dec 27, 2021, 6:01 PM IST

Monkey Stealing Eggs: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியில் குரங்குகள் அதிகளவில் உள்ளன. வனத்திலிருந்து வெளியேறும் குரங்குகள் நகர்ப்பகுதிக்குப் படையெடுக்கின்றன. அங்குள்ள கடைகளில் பொரித்த பண்டங்களைச் சாப்பிட்டு ருசிகண்ட குரங்குகள் மீண்டும் வனத்துக்குச் செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டன.

முட்டைகளைச் சாப்பிட்டு பழகிய குரங்குகள் தற்போது அவற்றைத் திருடிச் செல்ல ஆரம்பித்துள்ளன. கடைக்காரர்கள் குரங்குகளிடமிருந்து முட்டைகளைப் பாதுகாப்பதில் கவனமாக உள்ளனர்.

இந்நிலையில் மைசூரு சாலையில் உள்ள உணவகத்தில் புரோட்டா போடுவதற்கு வைக்கப்பட்ட முட்டைகளை குரங்கு வந்து எடுத்தது. அதைப் பார்த்த கடைக்காரர் அதனை விரட்டினார்.

ஆனால் குரங்கு அவர் மீது பாய்ந்ததால் கடைக்காரர் ஓடிவிட்டார். தொடர்ந்து உணவகங்களில் புகுந்து முட்டைகளைத் திருடும் குரங்குகளைப் பிடிக்க வேண்டும் எனக் கடைக்காரர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: Karimangalam accident case: குடிபோதையில் நண்பனை வாகனத்தின் மீது தள்ளிவிட்டு விபத்து என நாடகம்: இருவர் கைது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details