தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் கையாடல்: முதன்மை மேலாளர் கைது - ஈடிவி பாரத் செய்தி

திருப்பூர்: 12 வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை கையாடல் செய்த வங்கியின் முதன்மை மேலாளர் கைது செய்யப்பட்டார்.

dsa
dsa

By

Published : Apr 21, 2021, 1:10 AM IST

திருப்பூர் எஸ்.ஆ.ர் நகர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையின் முதன்மை மேலாளர் தண்டபாணி என்பவர். வங்கியில் உள்ள 12 வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் பேரில், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் செந்தில்குமார் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில், முதன்மை மேலாளர் தண்டபாணி வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடள் செய்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து மண்டல மேலாளர் செந்தில்குமார் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், மாநகர குற்றப்பிரிவு போலீசார் முதன்மை மேலாளர் தண்டபாணியை கைது செய்து திருப்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

இதனிடையே கையாடல் செய்யப்பட்ட முதன்மை மேலாளர் தண்டபாணி கடந்த ஆண்டு மே மாதம் வங்கி நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டு தற்போது கோவையில் வசித்து வந்த நிலையில், போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடதக்கது.

ABOUT THE AUTHOR

...view details