தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா - எம்எல்ஏக்கள் மரியாதை - tamil news

ஈரோடு: பன்னீர்செல்வம் பூங்காவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக எம்எல்ஏக்கள் மரியாதை செலுத்தினர்.

எம்எல்ஏக்கள்
எம்எல்ஏக்கள்

By

Published : Feb 24, 2020, 3:22 PM IST

தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஈரோட்டில் அமைந்துள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு எம்எல்ஏக்கள் ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரமணியம் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது

மேலும், ஈரோடு அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைக்கு பெரியார் நகர் பகுதிக் கழகச் செயலாளர் மனோகரன் தங்க மோதிரம் வழங்கினார். இதுமட்டுமின்றி கட்சி தொண்டர்களும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்தனர்.

இதையும் படிங்க:திமுகவின் ஊதாரித்தனம் - அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details