கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஈரோடு மாவட்டத்திலும் நடைமுறையில் இருக்கிறது. மேலும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்தும்வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில், பெருந்துறை தொகுதி அதிமுக சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச காய்கறிகள், முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன. தற்போதுவரை சுமார் 1 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு எம்.எல்.ஏ. நிவாரண உதவி - Relief aid for load lifting workers
ஈரோடு : சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் நிவாரண உதவி வழங்கினார்.
![சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு எம்.எல்.ஏ. நிவாரண உதவி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் ஒருவருக்கு நிவாரண பொருள் வழங்கும் காட்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6955577-thumbnail-3x2-erd.jpg)
எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் ஒருவருக்கு நிவாரண பொருள் வழங்கும் காட்சி
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் நிவாரண பொருள் வழங்கினார்
இதில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் கலந்துகொண்டு, சுமார் 400க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறிகள், முகக்கவசங்கள், கிருமி நாசினி, மருந்துகளை வழங்கினார். இதில் தகுந்த இடைவெளியுடன் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொருள்கள் வாங்க நின்றனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.