தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அந்தியூரில் குதிரைகளின் சாகச நிகழ்ச்சியை தொடங்கி வைத்த எம்எல்ஏ

ஈரோடு: அந்தியூரில் நடைபெற்றுவரும் குதிரை சந்தையில் குதிரைகளின் சாகச நிகழ்ச்சியை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

horse

By

Published : Aug 10, 2019, 6:07 AM IST

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் குருநாதசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு தென்னிந்திய அளவில் மாபெரும் குதிரை, கால்நடைகள் சந்தை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் 7ஆம் தேதி திருவிழா தொடங்கியது.

இதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து நூற்றுக்கணக்கான குதிரைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. இதில் குதிரைகளின் நடனம், குதிரையேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

குதிரைகளின் சாகச நிகழ்ச்சியை தொடங்கிவைத்த எம்.எல்.ஏ.

இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் குதிரை சாகச நிகழ்சிகள் மற்றும் போட்டிகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்துகுதிரை சந்தையை மையமாக கொண்டு புதுமுகங்கள் நடிக்கும் 'ஏரோட்டி' என்ற திரைப்பட படப்பிடிப்பையும் ஆரம்பித்து வைத்தார்.

மேலும் திருவிழாவில் நாட்டு மாடுகள் வளர்ப்பு பிராணியான நாய்கள், புறாக்கள், கோழிகளும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details