ஈரோட்டில் திமுக சார்பில் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளர் மணிமாறன், அந்தியூர் தொகுதி வேட்பாளர் வெங்கடாசலம், பவானி தொகுதி வேட்பாளர் துரைராஜ், பவானிசாகர் தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளர் சுந்தரம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "கூட்டத்தைப் பார்த்தால் கடல் அலைபோல் உள்ளது. தேர்தலுக்காக மட்டும் சந்திக்க வந்ததாக நினைக்கக்கூடாது. உங்களோடு எப்போதும் இருப்பவன் என்ற உரிமையோடு வாக்கு கேட்டு வந்துள்ளேன். மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.
கோபிசெட்டிபாளையத்தில் டீக்கடை நடத்திவரும் எளியவரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளோம். செங்கோட்டையனிடம் கைகட்டி நின்றார் பழனிசாமி. தற்போது பழனிசாமியிடம் கைகட்டி நிற்கிறார், செங்கோட்டையன். பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களே மரியாதை கொடுக்காத அமைச்சர் செங்கோட்டையன்.