கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி பகுதியில் வசித்து வந்த ஸ்ரீதேவி என்பவர் 2015ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி விக்னேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கும் கோவை நீதிமன்றத்தில்தற்போது நடைபெற்று வருகிறது.
தாய், தந்தை, சகோதரர் ஆகியோரை பிரிந்த ஸ்ரீதேவி, ஈரோடு சம்பத் நகர் பகுதியில் உள்ள வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், பிரவீன் என்ற நண்பருக்கு போன் செய்து தற்கொலை செய்துகொள்ள போவதாகக் கூறிவிட்டு ஸ்ரீதேவி தனது செல்போனை அணைத்து வைத்துள்ளார்.
இதையடுத்து, உடனடியாக பிரவீன் அளித்த தகவலின் பேரில் ஈரோடு வடக்கு காவல் துறையினர் ஸ்ரீதேவி தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அங்கு ஸ்ரீதேவி தற்கொலையால் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.