ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட மண்அரிப்பு காரணமாக வாய்க்காலின் இடது கரையில் உடைப்பு ஏற்பட்டு நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் தேக்கம்பாளையம், நாகரணை, சின்னபீளமேடு, மில்மேடு ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், வாழை, கரும்புப் பயிர்கள் சேதமடைந்தன.
குறிப்பாக தேக்கம்பாளையத்தில் தண்ணீர் புகுந்ததால் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதித்தன. இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் சந்தித்து நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர்.