ஈரோடு:ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் பகுதியில், அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் சேகர் பாபு ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 75,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் பணிக்குகூட வரவில்லை. நாங்களாவது இங்கு வந்துள்ளோம். தெரிந்தும் தெரியாததுபோல, திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று, அரசியலில் இருப்பதை காட்டுவதற்காக அதிமுகவினர் தெரிவித்து வருவது கண்டனத்துக்கு உரியது.
திமுக தேர்தல் விதிகளை மீறியதாக அதிமுகவினர் புகார் கூறி வருவது, பின்னால் ஏற்படும் தோல்விக்கு முன்பே ஒரு காரணத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே. இந்த குற்றச்சாட்டை அதிமுகவினர் கூறுவது, தோல்வி உறுதி என்பதை காட்டுகிறது. பாஜக, அதிமுக மாறி மாறி புறக்கணித்து வருவது ஒரு நாடகம் ஆகும்” என்றார்.
தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கேஎஸ் நகர், மரப்பாலம் வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் 75 சதவீதம் வாக்குகளை பெறுவோம். மக்களின் துயரத்தை துடைத்து இந்திய அளவில் சிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார்.