தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பாலின் தரத்தை உயர்த்தவே உள்ளூர் இன மாடுகள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுகிறது’ - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் - udumalai radhakrishnan

ஈரோடு: பாலின் தரத்தை உயர்த்தவே உள்ளூர் இன மாடுகள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

udumalai radhakrishnan

By

Published : Nov 26, 2019, 9:10 AM IST

பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையம் கிராமத்தில் 164 ஏக்கர் பரப்பளவில் கால்நடை நிலையம் அமைக்க கடந்த 2017ஆம் ஆண்டு ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான கட்டடப் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. இதில், நிர்வாக அலுவலகக் கட்டிடம், மாட்டுக் கொட்டகை, தீவன உற்பத்தி நிலையம் உள்ளிட்டவை அடங்கும். புதிய கட்டடங்கள் திறப்பு விழா பகுத்தம்பாளையம் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலைய கட்டடங்களை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்து காங்கேயம் இன மாடுகளைப் பார்வையிட்டனர்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

இதைத் தொடர்ந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘காங்கேயம் கால்நடை இனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2017இல், இந்த ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கட்டடங்கள் திறந்த வைக்கப்பட்டுள்ளன. இதில் 50 காங்கேயம் இன பசுக்களும் காளை மாடுகளும் உள்ளன. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் தரமான பசுங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

ஏற்கனவே அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் பர்கூர் இன மாடு ஆராய்ச்சி நிலையம் ஆறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. தற்போது அந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு இந்தியாவின் தேசிய விருதான ’காமதேனு விருது’ வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

இதையும் படிங்க:கால்நடைகளுக்கு அம்மா ஆம்புலன்ஸ் -உடுமலை ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details