ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள லக்கம்பட்டி காசிபாளையம் மற்றும் அரசூர் பகுதிகளில் 529 ஏழை பெண்களுக்கு தலா 25 அசில் இன நாட்டுக் கோழிகளையும், தலா 2 ஆயிரத்து 75 ரூபாயையும் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பணன் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "ஆண்டு தோறும் தமிழ்நாடு முழுவதும் 2.5 லட்சம் பெண்களுக்கு நாட்டுக் கோழியும், 1.5 லட்சம் பெண்களுக்கு 6 லட்சம் வெள்ளாடுகள், 12 ஆயிரம் கறவை பசுக்கள் வழங்கபட்டு வருகின்றன. தலைவாசலில் அமைக்கப்பட்டு வரும் கால்நடைப் பூங்காவின் 70 விழுக்காடு கட்டட பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் இரண்டு மாதத்தில் பணிகள் முழுமையாக நிறைவடைந்து வகுப்புகள் தொடங்கப்படும்.