தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உயர் மின் கோபுர விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார்கள்' - அமைச்சர் தங்கமணி! - ஈரோடு

ஈரோடு : உயர் மின் கோபுர விவகாரத்தை ஒரு சிலர் அரசியல் ஆக்க முயற்சிப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

minister thangamani erode visit

By

Published : Nov 21, 2019, 8:43 AM IST

ஈரோடு மாவட்டம் பாசூரில் காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்திற்கான சாலையில் இரண்டாவது முறையாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பகுதியை தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசிய அமைச்சர் தங்கமணி கூறுகையில், ஈரோடு- நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் பாசூர் பாலம் அருகேயுள்ள சாலை மூன்று மாதங்களுக்குள் நிரந்தரமாக சரிசெய்யப்படும் என்றும், தற்போது விரைவில் போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்த போது...

மேலும், தமிழ்நாட்டில் ப்ரீபெய்டு மின் திட்டம் கொண்டு வர திட்ட அறிக்கைத் தயாராகி வருகிறது. மின்சாரத்துறைக்கு 5 ஆயிரம் பேர் எடுக்க உள்ளனர். அதற்கான நேர்முகத் தேர்வு இம்மாதம் 25ஆம் தேதி நடத்தப்படும் என்றார்.

மேலும் உயர்மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தை சிலர் அரசியலாக்க முயற்சி செய்து வருகின்றனர். அதற்குள்ளே செல்ல நான் விரும்பவில்லை, தமிழ்நாட்டில் தேவைக்கு அதிகமான மின்சாரம் உள்ளது. தமிழ்நாட்டில் மின்வெட்டு என்பதே வராது என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

அமைச்சர் தங்கமணி செய்தியாளர் சந்திப்பு

இதையும் படிங்க:

ஈரோடு - புளியம்கோம்பை பகுதியில் அணை கட்ட மக்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details