தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டுச்சர்க்கரை கொள்முதல் மீண்டும் தொடக்கம்! - பழநி தேவஸ்தானம்

ஈரோடு: ஆறு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட நாட்டு சக்கரை கொள்முதலை மீண்டும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தொடங்கி வைத்தார்.

நாட்டுச்சர்க்கரை கொள்முதல் மீண்டும் தொடக்கம்
நாட்டுச்சர்க்கரை கொள்முதல் மீண்டும் தொடக்கம்

By

Published : Oct 15, 2020, 8:23 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தபாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இருந்த விவசாயிகளிடம் பழநி முருகன் கோயில் தேவஸ்தானம் பஞ்சாமிர்தம் தயாரிக்க மூலப்பொருளாக உள்ள நாட்டு சர்க்கரையை கடந்த 25ஆண்டுகளுகாக கொள்முதல் செய்து வந்தது.

கடந்த ஆறு வருடங்களாக இடையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பழநி தேவஸ்தானம் நாட்டு சர்க்கரையை கொள்முதல் செய்வதை நிறுத்தியது. இதனால் கரும்பு விவசாயிகள் கடும் இழப்பீடுகளை சந்தித்து வந்தனர். பழனி தேவஸ்தானம் மீண்டும் கொள்முதல் செய்ய நாட்டு சர்க்கரை உற்பத்தி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

நாட்டுச்சர்க்கரை கொள்முதல் மீண்டும் தொடக்கம்

இதையடுத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் முதல்வரிடம் கலந்து ஆலோசித்தை தொடர்ந்து மீண்டும் நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தபாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 6 வருடங்களுக்கு பிறகு பழநி தேவஸ்தானம் பஞ்சாமிர்தம் தயாரிக்க நாட்டு சர்க்கரையை கொள்முதல் செய்யும் பணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தனர்.

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நாட்டு சர்க்கரையை 60 கிலோ மூட்டைக்கு ரூ. 2,490 வீதம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டு சர்க்கரையை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாட்டு சர்க்கரையை தரம் குறித்து பழநி தேவஸ்தானம் அதிகாரிகள் விவசாயிகளிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்று நிகழ்ச்சியில் பழநி தேவஸ்தானம் செயல் அலுவலர் நடராஜ், பஞ்சாமிர்த தயாரிப்பு கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் விவசாயிகள் என்று பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: மக்கள் ஜனாதிபதி ஏவுகணை நாயகன் கலாம் வாழ்வின் சுவாரஸ்ய அம்சங்கள்!

ABOUT THE AUTHOR

...view details