தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Erode East By election: பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி பிஜேபி - அமைச்சர் செந்தில் பாலாஜி கடும்தாக்கு! - evks

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி என்றும், தங்களை மையப்படுத்தி தேர்தல் நடைபெறுவது போன்ற மாயையை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் தாக்கிப் பேசியுள்ளார்.

Minister Senthil Balaji has criticized BJP as a party without people even for the booth committee
பிஜேபி பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

By

Published : Feb 5, 2023, 7:17 PM IST

Erode East By election: பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி பிஜேபி - அமைச்சர் செந்தில் பாலாஜி கடும்தாக்கு!

ஈரோடுகிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறும் நிலையில், கிழக்கு சட்டமன்றத்திற்கு உட்பட்ட 32ஆவது வார்டு பகுதியில் திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கு உட்பட்ட கிருஷ்ணம்பாளையம், திருநகர் காலனி, மாதவகாடு பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “பொதுமக்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க உற்சாகத்தோடு இருக்கிறார்கள். செல்லும் இடங்களில் மக்கள் உற்சாகத்தோடு வரவேற்பு அளிக்கிறார்கள். முதலமைச்சரின் கடந்த ஒன்றரை ஆண்டு கால சாதனையாக கைச்சின்னம் மாபெரும் வெற்றி பெறும்.

மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பது தவறான கருத்து. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்தேர்தல் கூட நடத்த முடியாத ஒரு நிலை இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்களுக்குத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதிமுகவின் கோட்டை என்பது தவறு, இது திமுகவின் எஃகு கோட்டை. பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.

அண்ணாமலை குறித்த கேள்விக்கு, “ அவங்க கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை அவரிடம் கேளுங்கள். பாஜக ஒரு மிஸ்டு கால் பார்ட்டி. பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி. இல்லாத ஒரு நபரை இருப்பதைப் போல் காட்டி அவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். அவர்களை மையப்படுத்தி தேர்தல் நடப்பது போன்ற சூழலை உருவாக்குகின்றனர்” என்றார்.

மேலும் அவர், ''மாதந்தோறும் மின்சார கட்டணம் கணக்கீடு செய்வதற்கு பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதைப் பொருத்திய பின் விரைவில் மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.

விசைத்தறி இந்தப் பகுதியில் மிக அதிகமாக இருக்கிறது. அதிமுக கடந்த பத்து ஆண்டு காலங்களில் மின் கட்டணம் ஏற்றாததை போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றனர். 2010ல் இருந்த மின்கட்டணத்தை விட கூடுதலாக அதிமுக ஆட்சியில் 117 விழுக்காடு உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. விசைத்தறிகளுக்கு அதிமுக ஆட்சியில் 120 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது.

விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் விரைவில் 1000 யூனிட் ஆக உயர்த்தப்படும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு மகத்தான வெற்றியாக இந்த இடைத்தேர்தல் வெற்றி அமையும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’வேங்கைவயல் பிரச்சனையில் முன்னேற்றம் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது’ - திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details