ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஐயப்பா நகரில் அமைந்துள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்காவில் 600 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டார்.
அப்போது விழாவில் பேசிய அவர், “கீதையில் ”கேட்பதைக் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா” என்றும், இஸ்லாமில் ”இறைவனிடம் கையேந்துங்கள், அவர் இல்லை என்று சொல்வதில்லை” என்றும், ”தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்” என ஏசுபிரான் சொன்னதாகவும் கூறுவார்கள். ஆனால் கேட்காமலே கொடுக்கும் அரசாக இந்த அரசு உள்ளது.
பாரதப்பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுவதாகப் பாராட்டினார். ஒரு ஆட்சி மாறினால் என்ன தடுமாற்றம் வரும் என வியாபாரிகளுக்கு நன்கு தெரியும். ஆனால் தற்போது நடைபெறும் ஆட்சியில் ஒரு நாளும் வியாபாரிகளுக்கு துன்பத்தைக் கொடுத்தது கிடையாது. அவர்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே முன்னின்று செய்து கொடுத்து வருகிறோம்.