தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குடியுரிமை திருத்த சட்டத்தில் முதல்வரின் முடிவே அதிமுகவின் முடிவு' - அமைச்சர் செங்கோட்டையன்! - minister senkottaiyan campaign for erode admk candidates

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரப்புரையில் ஈடுபட்டார்.

senkotaiyan
அமைச்சர் செங்கோட்டையன்

By

Published : Dec 22, 2019, 9:44 AM IST

Updated : Dec 22, 2019, 9:50 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளாங்கோயில், சிறுவலூர் , அயலூர் உட்பட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அதிமுக கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த பரப்புரையின்போது, ஊராட்சிகளில் போட்டியிடும் தலைவர், வார்டு உறுப்பினர்கள் , ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட உறுப்பினர்கள் என அனைவருக்கும் அவரவர் சின்னங்களில் வாக்களிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிரச்சாரம்

மேலும் பள்ளிக்குழந்தைகளிடம், அடுத்தாண்டு முதல் காலனிக்கு பதில் உங்களுக்கு ஷு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் போல் ஆங்கிலமும் கற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. வரும் ஆண்டில் தனியார் பள்ளிக்குழந்தைகள் போல் அரசு பள்ளிக்குழந்தைகளும் பெற்றோர்களுடன் ஆங்கிலத்தில் பேசப்போகிறார்கள். ஆங்கில மோகத்தால்தான் பெற்றோர்கள் தங்களது வருவாய்களை இழந்து தனியார் பள்ளிகளில் படிக்க குழந்தைகளை அனுப்புவதாகவும், இனிமேல் அதுபோல் நடைபெறாது எனவும் கூறி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்," 72 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட்போர்டு வைப்பதற்கும், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பதற்குமான ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதற்குள் ஆய்வு முடிந்துவிட்டதைப்போல் பேசுவது நியாயமாக இருக்காது. குடியுரிமை மாசேதாவிற்கு அதிமுக ஆதரவளித்தது முதலமைச்சரின் முடிவாகும். அதுதான் அதிமுகவின் முடிவும் என்றார்.

இதையும் படிங்க: தஞ்சையில் வளர்ந்துவரும் குதிரை சந்தை!

Last Updated : Dec 22, 2019, 9:50 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details