தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள்: அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு! - Erode Jallikattu peravai

ஈரோடு: இரண்டாவது ஆண்டாக ஈரோட்டில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வுசெய்தார்.

jallikattu
jallikattu

By

Published : Jan 5, 2020, 5:23 PM IST

தமிழ்நாடு அரசின் உதவியுடன் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜல்லிக்கட்டுப் பேரவை உள்ளிட்ட தனியார் அமைப்புக்களின் சார்பில் இரண்டாவது ஆண்டாக, ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வருகிற 18ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது.

சுமார் 35 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் போட்டிகள் நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

கடந்தாண்டை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை ரசித்திடும் வகையில் மேடைகள் அமைக்கும் பணியும், காளைகள் பாதுகாப்புடன் வந்து செல்வதற்கான வழிப்பாதையும் சிறப்புடன் அமைக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள்: அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு

நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கேட்டறிந்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், வீரர்கள், பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதரவேண்டும் என்றும், போட்டிக்கான அனைத்துப் பணிகளையும் ஒரு நாள் முன்னதாகவே முடிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர், இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக கடந்தாண்டைவிடவும் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தமிழக அளவில் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் வியக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு கால்நடைத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் பாதுகாப்பு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகள் ஈரோடு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாடிவாசலில் வண்ணம் பூசும் பணிகள் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details