தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் குளறுபடிகள் இல்லை’ - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

ஈரோடு: மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் எவ்வித குளறுபடிகளும் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்

By

Published : Nov 19, 2020, 5:19 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள கூடக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 அவசர ஊர்தி சேவையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “நீட் தேர்வு ரத்துசெய்ய வேண்டும் என்பதே அரசின் கொள்கை முடிவு. இதனை, பிரதமரிடம், முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். 18 ஆயிரம் மாணவர்கள் நீட் பயிற்சி பெற விண்ணப்பித்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பதற்கு முன் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவுறை வழங்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பள்ளிகள் திறக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சில மாவட்டங்களில் கரோனா தொற்று முற்றிலும் குறைந்திருந்தாலும் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை.

35 விழுக்காடு கல்வி கட்டணத்தை பெற்றோர்களிடம் வற்புறுத்தி வசூலிக்கக்கூடாது. அவர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்க வேண்டும். தஞ்சையில் சிறப்பு மண்டலம் அறிவிக்கப்பட்டு விவசாயிகளை பாதுகாக்கபட்டு வருகின்றனர்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி திறப்பு குறித்து பெற்றோர் கல்வியாளர்களின் கருத்துகளை தெரிந்து கொண்ட பிறகே முதலமைச்சர் அறிவிப்பார். மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் எவ்வித குளறுபடிகளும் இல்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'தமிழ்ப் பெயர் இல்லை... அதனால் தமிழைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு யோக்கியதை இல்லை' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

ABOUT THE AUTHOR

...view details