ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைம் தனியார் திருமண மண்டபத்தில் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
அப்போது, அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “ இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றில் ஒரு அரசு என்ன செய்யவேண்டுமோ அத்தனை மக்கள் நலத்திட்டங்களையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வரும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறினார்.