ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மொடச்சூர், அயலூர், கோட்டுப்புள்ளாம் பாளையம், அளுகுளி, கலிங்கியம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ.4.06 கோடி மதிப்பில் தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை, பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிட பணிக்கான பூமி பூஜை பணிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். கோபிசெட்டிபாளையம் பொது பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சுமாா் ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “அரசை பொருத்தவரையில் அரையாண்டு தோ்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தனியாா் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் தோ்வினை நடத்தலாம். மாணவா்கள் சோ்க்கைக்கு பிறகு மாணவா்களுக்கு பயிற்சி அளிக்க எங்கெங்கு ஆசியா்கள் தேவைப்படுகிறதோ அந்த தேவைக்கேற்ப கூடுதல் ஆசிரியா்கள் நியமிக்கப்படுவாா்கள். தற்போது உள்ள ஆசியா்களே போதும் என்று பள்ளி தொிவித்தால் அரசு அதையும் பரிசீலனை செய்யும்.