ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி மொடச்சூர் சேரன் நகர் பார்க் நடைபாதை அபிவிருத்தி பணிகளுக்கான பூமிபூஜை, மொடச்சூர் சந்தைத் தெருவில் அமைந்துள்ள ஆதரவற்றோர் தங்கும் விடுதி திறப்பு விழா உள்ளிட்ட 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான தொகுதி வளர்ச்சிப் பணிகளை தொடங்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கிறது. 11ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அவர்கள் 12ஆம் வகுப்பில் சேர்ந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
'பிளஸ் 1 வகுப்பில் தோல்வியுற்றவர்கள் 12ஆம் வகுப்பில் சேர்ந்துகொள்ளலாம்'- அமைச்சர் செங்கோட்டையன் பிளஸ் 1 தேர்வில் கோவை 98.10 சதவீதம் பெற்று முதலிடமும், விருதுநகர் இரண்டாமிடமும், கரூர் மூன்றாமிடமும், ஈரோடு மாவட்டம் 4ஆம் இடமும் பெற்றுள்ளன. கரோனா வைரஸ் காரணமாக 12ஆம் வகுப்பு இறுதி தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறு தேர்வு எழுத அளிக்கப்பட்ட வாய்ப்பில் குறைந்தளவில் மாணவர்கள் தேர்வு எழுதியதைச் சுட்டிக்காட்டிய அவர், மறுதேர்வில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படாது என்றார்.
முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 12ஆம் வகுப்பு மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக வைத்த குற்றச்சாட்டுக்கு, அதுகுறித்து எங்கு அவர் சர்வே எடுத்தார் எனக் கேள்வி எழுப்பினார். மேலும், புதிய கல்விக் கொள்கை குறித்த மத்திய அரசு விரிவான அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பிய பின்பு முதலமைச்சர் அதன்மீது ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:சத்தியமங்கலம் வனஓடையில் காட்டாற்று வெள்ளம்!