காமராஜர் பிறந்தநாளையொட்டி வெள்ளாளபாளையம் ஊராட்சியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா பாடப் புத்தகங்களைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பதால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணி மூலம் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் வசதிக்காக 6 ஆயிரத்து 19 பள்ளிகளில் வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே டவுன்லோடு செய்து பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். யூடியூப் மூலமாகவும் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டிலிருந்தே கல்வி கற்கவும், சந்தேங்களைக் கேட்கவும் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை மூன்று தினங்களுக்குள் வெளியிடப்படும்.