தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி - Minister Sengottaiyan retaliates against BJP state vice president Annamalai

ஈரோடு: மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கே பொங்கல் பரிசு வழங்குகிறது தமிழ்நாடு அரசு என பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி
அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி

By

Published : Dec 23, 2020, 4:55 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பெரியகொடிவேரி சேவியர் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பள்ளி மாணவ- மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது அமைச்சர் செங்கோட்டைன் பேசியதாவது, "தனிமனித சுதந்திரம் இல்லையெனில் ஜனநாயகம் செத்துவிடும். உறவுகள் வேறு கொள்கைகள் வேறு. இனம், மதம், சாதி வேறுபாடு எங்களுக்கு கிடையாது.

அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி

பெரியார், அண்ணா, எம்ஜிஆர், அம்மா ஆகியோரால் வித்திட்ட மண் இது. தமிழ்நாட்டில் மட்டும் தான் பெயருக்கு பின்னால் சாதி இல்லை. கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெயருக்கு பின்னால் சாதி உள்ளது. மனிதநேயத்துடன் மதங்களை பார்க்கிறோம்.

மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கே பொங்கல் பரிசு வழங்குகிறது தமிழ்நாடு அரசு என பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை பேசிவிட்டு பின்னர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்றார். இதுபோன்று நாங்கள் மாற்றி மாற்றி பேசமாட்டோம்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய வேண்டும்: பாஜக மாநில துணைத் தலைவர்

ABOUT THE AUTHOR

...view details