ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
மாணவர்கள் பயிலும் பள்ளியிலே பொதுத்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் - minister sengottaiyan on tenth and twelfth public exams
ஈரோடு: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அப்போது, "மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படும். ஒரு தேர்வு அறையில் 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் வரும் 21ஆம் தேதி முதல் 5,000ஆக இருந்த தேர்வு மையங்கள், 12 ஆயிரம் தேர்வு மையங்களாக உயர்த்தப்பட்டன. 5 கி.மீ. துாரத்துக்குள் தேர்வு மையம் இருப்பதால் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். வரும் 29ஆம் தேதி அனைத்து ஆசிரியர்களும் தேர்வு மையத்துக்கு வர வேண்டும். முறைகேடுகள் நடப்பதை தவிர்ப்பதற்கு அரசுப் பள்ளிகளில் தனியார் ஆசிரியர்களும் தனியார் பள்ளிகளில் அரசு ஆசிரியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வருவதற்கு இ-பாஸ் வசதி பெற கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதன் மூலம் மாணவர்கள் அழைத்து வரப்பட்டு தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நுழைவுச் சீட்டு ஆன்லைன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் தேர்வு மையங்களை ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்றார்.
இதையும் படிங்க... 'வெவ்வேறு மாவட்டத்தில் இருக்கும் மாணவர்களும் தேர்வு எழுத நடவடிக்கை' - அமைச்சர் செங்கோட்டையன்!