தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைரஸ் தாக்கம் குறையும்போது தேர்வு தேதி அறிவிக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் - ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைம்

ஈரோடு: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் குறையும்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

By

Published : Apr 22, 2020, 1:31 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அன்றாட கூலித்தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள்களை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில் காலை, மதியம் வேளைகளில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில், தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூ.500க்கு 19 பொருள்கள் அடங்கிய மலிவு விலை அத்தியாவசிய பொருள்கள் திட்டத்தையும் தொடங்கிவைத்த அமைச்சர், பொதுமக்களுக்கு மலிவு விலை மளிகைப் பொருள்களை விநியோகம் செய்தார்.

அம்மா உணவகத்தில் காலை, மதியம் வேளைகளில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர்

இறுதியாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் ஊரடங்கு முடியும்வரை கட்டாய கட்டண வசூல் செய்யக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை தயார் நிலையில் உள்ளதாக கூறிய அமைச்சர், கரோனா வைரஸின் தாக்கம் குறையும்போது தேர்வுக்கான தேதியை முதலமைச்சர் அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.


இதையும் பார்க்க: உலக பூமி தினம்: கரோனாவை எதிர்க்கும் போராளிகளுக்கு பிரதமர் பாராட்
டு

ABOUT THE AUTHOR

...view details