தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோபிசெட்டிபாளையத்தில் 2 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டப்பணிகள் தொடக்கம்! - Minister sengottaiyan inaugurates 2 crores worth projects in erode

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் பகுதியில் ரூ.2 கோடி செலவில் புதிய திட்டப்பணிகளுக்கு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்.

ஈரோடு
ஈரோடு

By

Published : Jan 14, 2021, 9:13 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அளுக்குளி, கோட்டுப்புள்ளாம்பாளையம், அயலூர், கலிங்கியம், மொடச்சூர், சிறுவலூர், வெள்ளாங்கோவில், நாகதேவம்பாளையம், வெள்ளாளபாளையம், நஞ்சைகோபி, பாரியூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார். மேலும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக, குருமந்தூர் மேடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 207 சங்க உறுப்பினர்களுக்கு ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் போனஸ் தொகையினையும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அயலூர் ஊராட்சி, வெள்ளையகவுண்டன் புதூரில் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் அமைச்சர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details