தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவ உள் இட ஒதுக்கீடு பெற்றுத்தர முதலமைச்சர் தீவிர நடவடிக்கை: செங்கோட்டையன் - Latest Erode News

ஈரோடு: கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ உள் இட ஒதுக்கீடு பெற்றுக்கொடுக்க முதலமைச்சர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

minister-sengottaiyan-comments-about-the-neet-results
minister-sengottaiyan-comments-about-the-neet-results

By

Published : Oct 17, 2020, 10:43 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக கட்சியின் 49ஆவது ஆண்டு விழாவையொட்டி எம்ஜிஆர் சிலைக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நீட் தேர்வில் புதிய பாடத் திட்டத்திலிருந்தே அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இந்திய நாடே தமிழ்நாட்டில் புதியதாக கொண்டுவந்துள்ள பாடத்திட்டத்தை பின்பற்றிவருகின்றனர்.

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

அரசு பள்ளியில் படித்த மாணவர் 664 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார். கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ உள் இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுக்க முதலமைச்சர் தீவிர நடவக்கை மேற்கொண்டுவருகிறார்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இயற்கையை அழித்து சிட்கோ அமைக்க விடமாட்டோம் - ஜோதிமணி எம்.பி.,

ABOUT THE AUTHOR

...view details