தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழ்பவானி வாய்க்கால் நியாயப்படி பலப்படுத்தப்படும் - அமைச்சர் சு.முத்துசாமி - minister

இரு தரப்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடப்பாண்டு நியாயப்படி பவானிசாகர் கீழ்பவானி வாய்க்கால் பலப்படுத்தப்படும் என அமைச்சர் சு.முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

நியாயப்படி வாய்க்கால் பலப்படுத்தப்படும் - அமைச்சர் சு.முத்துச்சாமி
நியாயப்படி வாய்க்கால் பலப்படுத்தப்படும் - அமைச்சர் சு.முத்துச்சாமி

By

Published : Nov 7, 2022, 4:01 PM IST

ஈரோடு:பவானிசாகர் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் தங்கநகரம் கிளைவாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது ரூ.30 லட்சம் செலவில் கான்கிரீட் தளம் அமைத்து, கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணியை அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சு.முத்துசாமி கூறியது, ’தங்கநகரம் கிளை வாய்க்கால் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. 10 நாள்களாக தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை வரை சீரமைப்புப் பணிகள் நடைபெறும். தற்போது நீர்வளத்துறை சார்பில் இதுபோன்ற வலுவிழந்த கிளை வாய்க்கால் இடங்களை அடையாளம் கண்டு முன்கூட்டியே சரிசெய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக கான்கிரீட் கால்வாய் தளம் அமைக்கும் பணிக்கு ஆதரவும் எதிர்ப்பும் நடந்து வரும் நிலையில், இரு தரப்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி என்ன நியாயம் இருக்கிறதோ அதன்படி வாய்க்கால் வலுப்படுத்தப்படும்' எனத் தெரிவித்தார்.

அமைச்சர் சு.முத்துச்சாமி அளித்த பேட்டி

இதையும் படிங்க:பொன்முடி மகனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியா?...சிவி. சண்முகம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details