ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சியில் காய்ச்சல் முகாமினை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், " கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அடுத்த 15 நாட்களுக்குள் கரோனா தொற்று இல்லை என்ற நிலை உண்டாகும். கரோனா தொற்றை தடுப்பதில் முதலமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார்.