தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சிறுபான்மையினருக்கு எதிரி அதிமுக" - அமைச்சர் நாசர்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, அதிமுக சிறுபான்மையினருக்கு எதிரி என்பது வெளிப்படையாக தெரிந்து விட்டதாக அமைச்சர் நாசர் கூறினார்.

அதிமுக சிறுபான்மையினருக்கு எதிரி.. அமைச்சர் நாசர்!
அதிமுக சிறுபான்மையினருக்கு எதிரி.. அமைச்சர் நாசர்!

By

Published : Feb 10, 2023, 7:06 AM IST

ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக, பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அமைச்சர் நாசர் செய்தியாளர் சந்திப்பு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர், “திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மீதமுள்ள 20 சதவீத திட்டங்கள் தொலைநோக்கு திட்டங்கள் கூடிய விரைவில் அந்த திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

அதிமுக நான்காக பிரிந்து, யாரை யார் காலி செய்வது என்ற முயற்சியை எடுத்து வருகிறது. எங்களது பணியை நாங்கள் செய்து வருகின்றோம். சிறுபான்மை இன மக்களுக்குத் தெரிய வேண்டும், இவர்களது நாடகம் என்ன என்று. தன்னை வளர்த்துக் கொள்ள நினைப்பவர்கள்தான் இவர்கள் (அதிமுக).

ஒட்டுமொத்தமாக சிறுபான்மை இன மக்களுக்கு எதிரி என்பது மறைமுகமாக இருந்தது. தற்போது அது வெளிப்படையாக தெரிந்து விட்டது. இவர்களை இயக்குவது பாரதிய ஜனதா கட்சிதான். தற்போது பாஜக தான் பஞ்சாயத்து செய்து வைத்திருக்கிறது. திருமகன் ஈவேரா மறைவுக்கு முன்பாக ஒதுக்கபட்ட நிதித் திட்டங்கள் அனைத்தும் தேர்தல் முடிந்தவுடன் நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.

இதையும் படிங்க:சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்.. நாசர் மகன் நீக்கத்திற்கு காரணம் இது தான்..

ABOUT THE AUTHOR

...view details