ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் நேற்று (அக். 20) இரவு பெய்த கனமழையின் காரணமாக ரங்கம்பாளையம், அன்னை சத்தியா நகர் உள்ளிட்ட ஓடை பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.
இதன் காரணமாக வீடுகளிலிருந்த பொருட்கள் நீரில் மூழ்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்களைத் தீயணைப்புத் துறை உதவியுடன் மீட்டுப் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்தனர்.