ஈரோடு:இந்து சமய அறநிலைய துறை சார்பில் இலவச திருமண விழா திண்டல் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற இத்திருமண விழாவில் தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துக் கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
மணமக்களுக்கு 3 கிராம் எடையுள்ள திருமாங்கல்யம், கட்டில், மெத்தை, தலையணை, குத்து விளக்கு, பாத்திரங்கள், பழவகைகள் உள்ளிட்ட 49 வகையான சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.