தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி!

ஈரோடு மாவட்டம் பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.

பவானி வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அமைச்சர் முத்துசாமி!
பவானி வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அமைச்சர் முத்துசாமி!

By

Published : Aug 6, 2022, 12:01 PM IST

ஈரோடு மாவட்டம் பவானியில் கந்தன் நகர், மார்க்கெட் வீதி, தீயணைப்பு நிலையம் பின்புறம், பாலக்கரை வீதி போன்ற இடங்களில் வசிக்கும் பொதுமக்கள், காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட்5)மாலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பவானி தாலூகாவில் 265 வீடுகள் தண்ணீரில் பாதிக்கப்பட்டு, 892 பேர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஈரோடு நகரில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர், கொடுமுடி ஒன்றியத்தில் 94 குடும்பங்களைச் சேர்ந்த 354 பேர் என ஈரோடு மாவட்டத்தில் 369 குடும்பங்களைச் சேர்ந்த 1,277 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பவானி வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அமைச்சர் முத்துசாமி!

தண்ணீர் ஊருக்குள் வருவதை தடுக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. நமக்கு இருக்கும் பெரிய பிரச்னை நீர் வழி புறம்போக்கு குடியிருப்பு ஆகும்.

அவர்களுக்கு பாதுகாப்பான இடம் கொடுப்பது அரசின் கடமை. முதலமைச்சரும் அவர்களுக்கு பாதுகாப்பான இடம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அதில் சில நடவடிக்கைகளையும் நீதிமன்றம் எடுத்து வருகிறது. நீர்வழி புறம்போக்கில் இருந்து பாதிக்கப்படுபவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கும். எனவே பொதுமக்கள், குறிப்பாக நீர்வழி புறம்போக்கு சாலை புறம்போக்கு இடங்களில் இருக்கும் பொதுமக்கள், அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும்.

அதேபோல் உங்களுக்கு ஒரு பாதுகாப்பான இடம் இல்லாமல் வெளியே அனுப்ப இந்த அரசு தயாராக இல்லை. உங்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கிய பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த இடங்களை எடுக்க உள்ளது” என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ண உண்ணி, பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:கழுகு பார்வையில் காவிரி ; கடல் போல் காட்சியளிக்கும் பவானி

ABOUT THE AUTHOR

...view details