தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நலத்திட்டங்களாக வரும் பொதுமக்களின் மனுக்கள் - அமைச்சர் முத்துசாமி - கோபிசெட்டிபாளையத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி

தேர்தல் நேரத்தில் பெறப்பட்ட மனுக்கள், தற்போது நலத்திட்டங்களாக வருவதாக அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

minister Muthusamy
minister Muthusamy

By

Published : Jan 13, 2022, 10:29 AM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, 333 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றிய வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, "தேர்தல் நேரத்தில் பெறப்பட்ட மனுக்கள் தான் தற்போது நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் முத்துசாமி

மாவட்டங்கள் வாரியாக திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்கிறார். அரசின் திட்டங்களில் சில குறைகள் வருவது இயல்பு அது தவிர்க்கவும் முடியாது.

முடிந்தவரை நிவர்த்தி செய்து வருகிறோம். எந்த குறைகள் இருந்தாலும் கூறுங்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெல்லையப்பர் கோயிலில் 'நெல்லைக் காத்த திருவிளையாடல்' நிகழ்ச்சி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details