தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளியின்போது மதுக்கடைகளில் கூடுதல் பாதுகாப்பு - அமைச்சர் முத்துசாமி - தீபாவளி மது விற்பனை குறித்து அமைச்சர் முத்துசாமி

Minister Muthusamy: இனி அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகள் 500 சதுர அடி பரப்பளவு குறையாமல் இருக்கத் திட்டமிட்டுள்ளதாக, ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் ஊழியர்களைத் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்க எடுக்கப்படும்
டாஸ்மாக் ஊழியர்களைத் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்க எடுக்கப்படும்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 7:01 PM IST

அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

ஈரோடு:தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுவதும் பவ்வேறு பகுதிகளில் திமுகவினர் சார்பில் "கலைஞர் நூற்றாண்டு விழா" என்னும் தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஈரோடு தெற்கு மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துசாமி, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா வடிவிலான வாகனம், வரும் 23ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வர உள்ளது. அந்த வாகனத்தில் கண்காட்சி ஒன்றும் அமைய இருக்க உள்ளது. கருங்கல்பாளையம் பகுதியில் இருக்கும் காமராஜர் பள்ளியின் மைதானத்தில், அந்த வாகனம் மக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட உள்ளது” என்றார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையில் கருத்து குறித்து செய்தியாளர் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரியார் சிலை அகற்றுவோம் என்று சொல்வது மிக தவறான கருத்து. பெரியார் கொள்கைகளை வழங்கியவர் மட்டுமல்ல, அவர் மக்களுக்கான சமநிலையை உருவாக்கிய தலைவர். அவருடைய சிலையை அகற்றுவது என்பது தவறான செயல்.

பாஜக முதலில் ஆட்சிக்கு வரட்டும், அதன் பின்பு பார்கலாம். அதற்கே அவர்களுக்கு வாய்ப்பில்லை, அப்படியே வந்து இதை போன்ற செயல்களில் ஈடுபட்டல், யாரும் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். நீதிமன்றமும் தக்க நடவடிக்கையை எடுக்கும். ஆட்சிக்கு வருவது என்பது பாஜகவால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது" என்று விமர்சித்துப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவு நீர் வெளியேற்றும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிப்காட் தொழிற்சாலைகள் பாதிப்பு 20 ஆண்டுகால பிரச்சினை என்பதால் படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "தீபாவளிக்கு மது அதிக அளவில் விற்பனை என்பது எங்கள் இலக்கு இல்லை, மது விற்பனை குறைய வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு. டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் காவல்துறை மூலம் எடுக்கப்பட்ட உள்ளது.

டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மதுக்கடையில் விற்பனை நிகழும்போது போதுமான பாதுகாப்பு தடுப்புகள் உள்ளன. தீபாவளி பண்டிகை விற்பனையின்போது தேவைப்படும் இடங்களில் கூடுதல் தடுப்புகள் அமைக்கப்படும்" என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

இதையும் படிங்க: நெருங்கும் தீபாவளி.. விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ஆடுகள் விற்பனை அமோகம்!

ABOUT THE AUTHOR

...view details