தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீரன் சின்னமலையின் 216ஆவது நினைவு நாள்: அமைச்சர் முத்துச்சாமி மரியாதை - Minister Muthuchamy

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216ஆவது நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 3) அரச்சலூர் ஓடாநிலையில் அனுசரிக்கப்பட்டது.

தீரன் சின்னமலை
தீரன் சின்னமலை

By

Published : Aug 3, 2021, 1:16 PM IST

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் அரசு சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படும். அதன்படி இன்று அரச்சலூர் ஓடாநிலையில் அவரது நினைவாக அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது உருவச்சிலைக்குத் தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி மரியாதை செலுத்தினார்.

அப்போது, தமிழ்நாடு கேபிள் டிவியின் நிறுவனத் தலைவர் குறிஞ்சி சிவக்குமார், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணஉன்னி உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறுகையில், "தீரன் சின்னமலையின் 216ஆவது நினைவு நாள் இன்று அரசு சார்பில் அனுசரிக்கப்படுகிறது.

கரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி அரசு சார்பில் மரியாதை செலுத்தியிருக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: தீரன் சின்னமலை நினைவு தினம் - முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

ABOUT THE AUTHOR

...view details