ஈரோடு:கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரோனா நோய்த் தாக்குதலுக்கு உள்ளானோர் சிகிச்சைப் பெற சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் போதிய இடம் கிடைக்கவில்லை. மருத்துவமனைப் பற்றாக்குறையால் பெருந்துறை அரசு மருத்துவமனை மற்றும் கோபி பகுதிகளுக்கு நோயாளிகள் அனுப்பப்படுகின்றனர்.
இதையடுத்து, அத்தாணி சாலையில் செயல்பட்ட தனியார் பள்ளி, தற்போது கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. அங்கு 80 படுக்கைகளுடன் கூடிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு நோயாளிகள் அனுமதிக்கபட்டுள்ளனர். அங்கு உள்ள அடிப்படை வசதிகளை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் பார்வையிட்டனர்.