தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரிலாக்ஸாக கிணற்றில் குதித்த அமைச்சர் மா.சு; இணையத்தில் வைரலாகும் வீடியோ! - ma subramanian bathing in well

அமைச்சர் மா.சுப்ரமணியன் கிணற்றில் டைவ் அடித்து மகிழ்ச்சியாக குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சும்மா அடி டைவ்.. அமைச்சர் மா.சுவின் ரிலாக்ஸ் டைம்!
சும்மா அடி டைவ்.. அமைச்சர் மா.சுவின் ரிலாக்ஸ் டைம்!

By

Published : Feb 2, 2023, 10:44 AM IST

ஈரோடு:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மாரத்தான் உள்ளிட்ட தடகள வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால், இவர் அவ்வப்போது நடைபெறும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்பார். அதேபோல் நடைபயிற்சி மேற்கொண்டு, விழிப்புணர்வு செய்து அதனை வீடியோவாக சமூக வலைதளங்களிலும் பதிவிடும் வழக்கம் உடையவர்.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்துக்குச் சென்ற அமைச்சர் மா.சுப்ரமணியன், அங்குள்ள கிணற்றில் குதித்து குளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தினந்தோறும் குளியலறையில் 2 குடம் தண்ணீரில் குளிக்கும் வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு இன்று காலை மகிழ்ச்சிகரமான கிராம குளியல்” என கூறியுள்ளார்.

மேலும் இதுதொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:"ராம் ராம் சொல்லு" நாய்க்கு பயிற்சி அளித்த பாஜக எம்எல்ஏ வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details