ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜேகே என்கின்ற ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஜெயக்குமாருக்கு ஆதரவாக பெருந்துறையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக வாக்குகளை, தவிர மாற்று கட்சி வாக்குகளையும் கைப்பற்ற வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மகளிர் சுய உதவி கடன் தள்ளுபடி, வருடந்தோறும் ஆறு சிலிண்டர், குடும்பத் தலைவிக்கு 1500 ரூபாய் உதவிதொகை என அதிமுக அரசின் அறிவிப்புகள் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.