ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.பண்ணாரியை ஆதரித்து கேர்மாளம், கடம்பூர் மலைப் பகுதியில் அமைச்சர் கருப்பணன் பரப்புரை செய்தார். பின்னர், ஆசனூரில் அதிமுக கிளை நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கூறுகையில், ’’கடந்த மக்களவை தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதியை தந்து தேர்தலில் வெற்றி பெற்றது. மேலும், வங்கி கணக்குகளில் மாதம் ரூ.6 ஆயிரம் தருவதாக வாக்குறுதி கொடுத்தார்கள் அதனை நம்பி நீங்களும் வாக்கு அளித்தீர்கள்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகைக்கடன் தள்ளுபடி என திமுக அறிவித்த காரணத்தால் அதை நம்பி உங்ளுடைய வங்கி கணக்குகளை கொடுத்தீர்கள். ஆனால், திமுக தள்ளுபடி செய்யவில்லை. அதிமுகதான் தள்ளுபடி செய்தது. தலமலை தாளவாடி பகுதியில் சுமார் ரூ.20 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில், மகளிர் சுயஉதவிக்குழு கடன் ரூ.1 கோடி வரை தள்ளுபடியானது.