சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையத்தில் நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜன் அறிமுகக்கூட்டம் மற்றும் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் தியாகராஜன், கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஸ்டாலின், ஆ.ராசாவை ஒருமையில் பேசிய அமைச்சர் - admk
ஈரோடு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும், நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவையும் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஒருமையில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Anann
அப்போது நிகழ்ச்சியின் துவக்கத்தில் இருந்தே கோபமாக இருந்த கே.சி.கருபண்ணன், வேட்பாளரை அறிமுகம் செய்து பேசும்போது, ”அவன் ஒன்னுமே பண்ணமுடியாது வாக்குறுதி அளித்தாலும் ஜெயிக்க முடியாது என மு.க.ஸ்டாலினையும், ராசா டெபாசிட் வாங்கமாட்டான், ஓடிவிடுவான் என ஆ.ராசாவையும் ஒருமையில் பேசினார். அவரது இந்த பேச்சு திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.