ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி அம்மா உணகவங்களில் அதிமுக சார்பில் இலவச உணவுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதிமுக சார்பில் நடைபெறும் இவ்விழாவில் அமைச்சர் கருப்பண்ணன் கலந்துகொண்டு பார்வையிட்டார்.
சத்தியமங்கலம் அம்மா உணவகத்தில் காலை, மதியம் என 800 பேருக்கு சிற்றுண்டி, சாப்பாடு வழங்கப்படும். புன்செய் புளியம்பட்டி அம்மா உணவகத்தில் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் தலா 300 பேர் வீதம் 900 பேருக்கு உணவு வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விழாவில் பவானிசாகர் எம்எல்ஏ, ஈஸ்வரன் முன்னிலை வகிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அமைச்சர் விழாவுக்கு வந்த பிறகு எம்எல்ஏ விழாவிற்கு வராமல் புறக்கணிப்பதாகக் கூறப்பட்டது.