ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சதுமுகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் பங்கேற்று பேசுகையில், "அதிமுக அரசுதான் ஏழை மக்களுக்குத் தேவையான அனைத்தும் வழங்கியுள்ளது.
மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, தாலிக்குத் தங்கம், கர்ப்பிணிக்கு உதவித் தொகை என அனைத்தும் வழங்கும் அதிமுக அரசுக்கு 100 விழுக்காடு இரட்டை இலைக்குத்தான் ஓட்டுப்போடுவேன் என்ற முடிவை நீங்கள் எடுக்க வேண்டும்.