ஈரோடு சத்தியமங்கலத்தில் அதிமுகவின் மூன்றாண்டுகள் ஆட்சி சாதனை பொதுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்று பேசினார். அப்போது மக்களவைத் தேர்தலில் பொய் சொல்லி திமுகவினர் வாக்கு சேகரித்து வெற்றிப் பெற்றனர் என தெரிவித்தார். மேலும் 39 திமுக எம்பிகளால் 39 பைசாவுக்கும் பிரயேஜன் இல்லை என திமுகவை வசைபாடினர்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “டெல்லி சென்ற திமுக எம்பிகளால் என்ன செய்ய முடிந்தது. முதலமைச்சர் எடப்பாடி டெல்லி சென்று மூவாயிரம் கோடி வாங்கி வந்து நலத்திட்ட உதவிகள் செய்துள்ளார். இதன் மூலம் சாலை வசதி, குடிநீர் நலத்திட்ட உதவி என மக்களுக்கு நலத்திட்டங்களை செய்யமுடிந்தது.