தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்: அமைச்சர் கருப்பணன் - minister karupannan

ஈரோடு: பெண்கள் ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறியுள்ளார்.

அமைச்சர்
அமைச்சர்

By

Published : Jun 23, 2020, 8:57 PM IST

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த, வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டம், கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அம்மா இருசக்கர வாகன மானியங்களைத் தற்போது தமிழக அரசு மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தபாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், கவுந்தபாடி மற்றும் பவானி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 71 மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனத்திற்கான மானியங்களை வழங்கினார்.

பின்னர், பேசிய அமைச்சர் கே.சி. கருப்பணன், வாகனம் ஓட்டும்போது பெண்கள் ஹெல்மெட் அணிந்து, சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடித்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details