தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் விழா: வாலிபால் விளையாடிய அமைச்சர் - அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்

ஈரோடு: அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தில் தொடங்கப்பட்ட மைதானத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கிரிக்கெட் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

minister karuppanan
minister karuppanan

By

Published : Jan 15, 2020, 11:34 PM IST

தமிழ்நாட்டில் கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும் கூட்டு மனப்பான்மையை உருவாக்கும் நோக்கில், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 70 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள ஓடத்துறை ஊராட்சிக்குட்பட்ட செல்லகுமாரபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா இளைஞர் விளையாட்டு திடலை தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார். இதன் பின்னர், கிரிக்கெட், வாலிபால் விளையாட்டுக்களை விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

கிரிக்கெட் விளையாடும் அமைச்சர் கருப்பணன்

எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன - முதலமைச்சர் பழனிசாமி

அரசு சார்பில் வழங்கப்பட்ட கிரிக்கெட் மட்டைகள், பந்துகள், ஹெல்மெட்டுகள் முதலியவற்றை கிராமப்புர இளைஞர்களுக்கு வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details