தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 8, 2020, 3:57 PM IST

ETV Bharat / state

'முதலமைச்சர் கைக்கூப்பினால் நிதிகளை அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள்' - அமைச்சர் கே.சி. கருப்பணன்

ஈரோடு: கழக நிர்வாகிகள் தங்கள் வாரிசுகளுக்கு வழிவிட வேண்டும் என்றும் மத்திய அரசிடம் முதலமைச்சர் கைகூப்பினால் நிதிகளை வாரி வழங்குகின்றனர் என அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்தார்.

minister K.C. Karuppannan speech
minister K.C. Karuppannan speech

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளி பாளையத்தில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாலின் 72ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில், ”தமிழ்நாட்டிற்கு நிதி தேவையெனில் தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசிடம் சென்று கை கூப்பினால் போதும், எவ்வளவு நிதி வேண்டுமானாலும் தருகிறார்கள்.

கிளைக் கழக செயலாளர்கள் சிறப்பாக செயல்படும் வாரிசுகளுக்கு வழிவிட்டு அவைத் தலைவர் பதவிகளை ஏற்க வேண்டும். பவானிசாகர் அணைக்கு தண்ணீர் கொண்டுவர 50 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட திட்டமான பாண்டியாறு பொன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற கேரளா முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தோமானால் கட்சியினருக்கு அரசு வேலை வாய்ப்புகளை ஏராளமாக வழங்கலாம். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பார்த்து வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் கூட தமிழ்நாட்டுக்கு திரும்பி தொழில் தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர்.

அடுத்தத் தேர்தலுக்கு தாய்மார்களுக்கு இலவசங்கள் அளிப்பது குறித்து தற்போதே முதலைமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். தூக்கநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற சம்பவத்தில் திமுக கழக நிர்வாகிகளை அடித்தது போல் நாம் அடித்தால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். ஆனால் அடியை வாங்கிக்கொண்டு கட்சியை காப்பாற்றும் தொண்டர்கள் நம்மிடம் உள்ளனர். ஒரு கன்னத்தைக்காட்டினால் மறு கன்னத்தையும் திருப்பி காட்டு என்று காந்தி சொன்னது போல், நம் கழக நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். இதற்காகவே நீங்கள் வரும் தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி வாய்ப்பைத் தர வேண்டும்” என்றார்.

இக்கூட்டத்தில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் சத்தியபாமா, ஒன்றிய கழகச் செயலாளர் மனோகரன், பொவலக்காளி பாளையம் ஊராட்சி செயலாளர் சீனிவாசன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் தங்கம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க...’சுய வருமானத்தில் கல்யாணம் செஞ்சி பாருங்க... லைப் நல்லாருக்கும்’ - பெண்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details