ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி பகுதிக்குட்பட்ட வேலம்பாளையம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ரூ.3 கோடி மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்.
வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பணி இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 'அதிமுகவில் ஊராட்சி செயலாளர்கள் ஒரு சிலர் செய்த தவறால்தான் அந்தப் பதவியே நீக்கப்பட்டது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்பும் அளவிற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் பலருக்கும் வங்கிக்கணக்கு இல்லாததால் தான் பொதுமக்களுக்கு நேரடியாகப் பணம் வழங்கப்படுகிறது. சாய தொழிற்சாலைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் சட்டவிரோதமாக செயல்படும் சாய தொழிற்சாலைகள் குறித்து அலுவலர்கள் குழு கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
நெய்வேலியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி வழங்கும்' என்றார்.
இதையும் படிங்க...'முதலமைச்சர் கைக்கூப்பினால் நிதிகளை அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள்' - அமைச்சர் கே.சி. கருப்பணன்